வனவிலங்கு சரணாலயம் திறக்கப்பட்டது


வனவிலங்கு சரணாலயம் திறக்கப்பட்டது
x

வனவிலங்கு சரணாலயம் திறக்கப்பட்டது

நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் 25 நாட்களுக்கு பிறகு வனவிலங்கு சரணாலயம் திறக்கப்பட்டது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் 24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மான், குதிரை, நரி, குரங்கு, பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதன் எதிர்புறம் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு செங்கால் நாரை, பூநாரை உள்ளிட்ட 290 வகையான பறவைகள் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை ஆண்டுதோறும் வந்து செல்கின்றன.

இந்த வனவிலங்கு சரணாலயம் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் மூடபட்டது. மழையால் சரணாலயத்தில் நீர் தேங்கி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு போடப்பட்ட சாலைகள் முற்றிலும் பழுதடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத சூழ்நிலை நிலவி வந்தது.

சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்

வனவிலங்கு சரணாலயத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் பூட்டியே வைத்திருந்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரணாலயம் திறக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 25 நாட்கள் மூடி கிடந்த சரணாலயம் மீண்டும் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் துள்ளித்திரியும் புள்ளிமான், வெளிமான் மற்றும் வனவிலங்குகளை பார்த்து ரசித்தனர். கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள பழுதடைந்த சாலையை சீரமைத்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story