கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
செங்கோட்டை அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவருடைய மனைவி முத்து துரைச்சி (வயது 38). இவருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் முத்துதுரைச்சிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 2-வதாக ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. அன்று முதல் முத்து துரைச்சி மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த முத்துரைச்சி நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியே சென்று அருகே தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலமுருகன் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story