கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பத்தூர் அருகே கொடும்பம்பள்ளி சாமு கவுண்டர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தருமன் என்பவரின் மனைவி இந்திரா (வயது 55). தருமன் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களின் மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இந்திரா கடந்த 10 தினங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 28-ந் தேதி சொந்த ஊருக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார்.
இந்த நிலையில் ஜோலார்பேட்டை அருகே குடியானகுப்பம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நேற்று காலை அவர் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் நாட்டறம்பள்ளி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்து பிணத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தன்னை கவனிக்க யாரும் இல்லாததால் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.