கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
சிங்கம்புணரி அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்ட நிலை கிராமத்தை சேர்ந்தவர் ராஜ சோழன். இவரது மனைவி அட்சயா (வயது 25). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ராஜ சோழன் வெளிநாட்டுக்கு சென்று விட்டு சமீபத்தில் ஊர் திரும்பி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெயங்கொண்ட நிலையில் இருந்து ஓடைப்பட்டி செல்லும் சாலையில் உள்ள கிணற்றில் அட்சயா குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த எஸ்.எஸ்.கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அட்சயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அட்சயாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆன நிலையில் ஆர்.டி.ஓ. பால்துரை தலைமையில் சிங்கம்புணரி தாசில்தார் சாந்தி, துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.