செஞ்சி அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ்


செஞ்சி அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ்
x
தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ் செய்யப்பட்டது. தொடா்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம்

செஞ்சி,

சென்னை பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மனைவி சூரியகாந்தி (வயது 68). இவர் சம்பவத்தன்று, திருவண்ணாமலைக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அப்போது மேல்மருவத்தூர் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய 3 பெண்களில் 2 பேர் சூரியகாந்தி இருக்கையின் அருகில் அமர்ந்துள்ளனர். பஸ் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலம் பேருந்து நிறுத்தத்தில் வந்ததும் அந்த 3 பெண்களும் பஸ்சில் இருந்து இறங்கி உள்ளனர். இதையடுத்து சூரியகாந்தி நகையை சோதனை செய்த போது, அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை காணவில்லை. இதை அந்த 3 பெண்களும் பறித்து சென்றிருப்பது தெரியவந்தது. பறிபோன நகையின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சூரியகாந்தி கொடுத்த புகாரின்பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற 3 பெண்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story