மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு


மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
x

மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துசென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர்


நாட்டறம்பள்ளி.ற அடுத்த கத்தாரி பகுதியை சேர்ந்தவர் தேவராஜி, வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (வயது 36). இவர் நாட்டறம்பள்ளி அருகே கே.பந்தாரப்பள்ளி பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு 3 வயது மகன் ரட்சத்குமாருடன் மொபட்டில் கத்தாரி சென்றார். சண்டியூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிள் வந்த 3 மர்ம ஆசாமிகள் தேன்மொழி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தாலி செயின் மற்றும் 2 பவுன் செயின் என 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து தேன்மொழி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


Next Story