கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து சாவு


கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 15 Oct 2023 12:15 AM IST (Updated: 15 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவேங்கடம் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து இறந்தார்.

தென்காசி

திருவேங்கடம்:

விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை தாலுகா அப்பையநாயக்கன்பட்டி கிராமம் அக்கரைப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 70). இவர் தனது மனைவி பஞ்சவர்ணத்தை (65) அழைத்துக் கொண்டு திருவேங்கடம் வந்து வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மழையுடன் காற்றும் பலமாக வீசியது. கையில் குடையை பிடித்திருந்த பஞ்சவர்ணம் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த பஞ்சவர்ணம் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பஞ்சவர்ணம் பரிதாபமாக உயரிழந்தார். இதுபற்றி திருவேங்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சக்திவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story