சிறுவளையத்தில் வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் காயம்
சிறுவளையத்தில் வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் காயம் அடைந்தார்.
ராணிப்பேட்டை
நெமிலி
சிறுவளையத்தில் வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் காயம் அடைந்தார்.
நெமிலியை அடுத்த சிறுவளையம் கிராமம், பெருமாள் கோவில் தெருவில் துரைசாமி மகள் ஜெகஜோதி (வயது 47) வசித்து வருகிறார். நேற்று முன்தினம் பெய்த மழையின்போது இவர்களின் மாடி வீட்டின் மேற்கூரை சிெமண்டு பூச்சு திடீரென்று பெயர்ந்து விழுந்தது. இதில் ஜெகஜோதி தலையில் காயம் அடைந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு வாலாஜா அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story