நள்ளிரவில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு


நள்ளிரவில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
x

தர்மபுரி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் கழுத்தில் இருந்த 7 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பியோடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தர்மபுரி

நகை பறிப்பு

தர்மபுரி மாவட்டம் உங்கரானஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருடைய மனைவி சியாமளா (வயது 58). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் நள்ளிரவு சின்னத்துரை, சியாமளா ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார்கள்.

நள்ளிரவில் சியாமளா எழுந்து வெளியே வந்தார். அப்போது திடீரென கதவை திறந்து உள்ளே நுழைந்த 25 வயது மதிக்கதக்க வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் சியாமளாவின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு ஓடினார். இதனல் அதிர்ச்சி அடைந்த சியாமளா திருடன், திருடன், என்று கூச்சலிட்டார்.

போலீசார் விசாரணை

இந்த சத்தத்தை கேட்டு எழுந்த சின்னத்துரை மற்றும் சியாமளா ஆகியோர் அந்த வாலிபரை துரத்தி சென்றனர். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இது தொடர்பாக சியாமளா மதிகோன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story