அரிவாளை காட்டி மிரட்டி பெண்ணிடம் சங்கிலி பறிப்பு


அரிவாளை காட்டி மிரட்டி பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
x

ஆலங்குளம் அருகே அரிவாளை காட்டி மிரட்டி பெண்ணிடம் சங்கிலி பறிக்கப்பட்டது.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி. இவர் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியில் இனிப்பு பலகார கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 39). பீடி சுற்றும் தொழிலாளியான நேற்று முன்தினம் ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் பீடி கம்பெனிக்கு குறுக்குப்பாதை வழியாக ஆண்டிப்பட்டிக்கு பீடியினை கொண்டு சென்றுள்ளார். பீடிகளை கம்பெனியில் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் போட்டு வந்த மர்ம நபர் அவரை வழிமறித்து அரிவாளை காட்டி நகையினை கழட்டி தருமாறு மிரட்டினார். அதற்கு மறுப்பு தெரிவித்த ஜெயலட்சுமியின் கழுத்தில் இருந்த 4.5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story