மாடு மேய்த்தபோது கிணற்றில் தவறி விழுந்த பெண் சாவு
மாடு மேய்த்தபோது கிணற்றில் பெண் தவறி விழுந்து இறந்தார்.
ஆரணி
மாடு மேய்த்தபோது கிணற்றில் பெண் தவறி விழுந்து இறந்தார்.
ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் வினோத் குமார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 27) நேற்று மாலை அந்த பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தில் நடராஜன் என்பவரின் கிணற்றின் அருகே மாடுகளை மேய்த்தவாறு சென்றபோது கால் தவறி கிணற்றில் விழுந்துவிட்டார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கிணற்றில் விழுந்த விஜயலட்சுமியை தேடினர். அது குறித்து ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர் உடனடியாக நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் சென்று கிணற்றுக்குள் இறங்கி தேடினர். சுமார் ஒரு மணி நேரம் போராடி விஜயலட்சுமியை அவர்கள் பிணமாக மீட்டனர்.
அப்போது அவரது உறவினர்கள் ஊரில் இன்று (வெள்ளிக்கிழமை) திரவுபதி அம்மன் கோவிலில் காலையில் படுகளமும், மாலையில் தீமிதி விழாவும் நடைபெறுகிறது. எனவே நாங்கள் உடனடியாக அடக்கம் செய்து விடுகிறோம். மேல் நடவடிக்கை வேண்டாம் என தெரிவித்து உடலை வாங்கிச்சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.