ஆழியாறு அணையில் குதித்து தொழிலாளி தற்கொலை
மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் ஆழியாறு அணையில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
கோயம்புத்தூர்
ஆழியாறு,
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் கன்னிகா என்பவரை திருமணம் செய்து கொண்டு அந்தமானில் வசித்து வந்தார். இந்த நிலையில் சுரேஷ் அடிக்கடி மது குடித்து விட்டு வந்ததால் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து மனைவியை பிரிந்து வந்து ஆழியாறில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தார். இந்த நிலையில் மன விரக்தியில் இருந்த சுரேஷ் ஆழியாறு அணைக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story