நாய் குறுக்கே வந்ததால் விபத்தில் தொழிலாளி பலி


நாய் குறுக்கே வந்ததால் விபத்தில் தொழிலாளி பலி
x

ஆம்பூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி பலியானார்.

திருப்பத்தூர்

ஆம்பூர் அடுத்த கென்னடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 35). இவர் தனியார் தோல் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது உறவினர் திருமணத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு பெரியாங்குப்பம் பகுதி அருகே சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு நாய் குறுக்கே வந்தது. இதில் நிலை தடுமாறி அருகே உள்ள கால்வாய் தடுப்புச்சுவரில் மோதி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story