மணலி அருகே கம்பியில் கிரேன் மோதியதில் தொழிலாளி பலி


மணலி அருகே கம்பியில் கிரேன் மோதியதில் தொழிலாளி பலி
x
சென்னை

மணலி,

சென்னை ராயபுரம், பாதாள விக்னேஷ்வர் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 55). இவருடைய மகன் ஜெகதீஷ் (29). இவர்கள் மணலி-மீஞ்சூர் விரைவு சாலையில் கம்பெனி நடத்தி வந்தனர். அந்த கம்பெனியை தற்போது விற்று விட்டனர். இதனால் கம்பெனிக்குள் இருக்கும் இரும்பு பொருட்களை எடுப்பதற்கு உறவினர்களான கோவிலம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நரசிம்மன் (56), அவருடைய மகன் தியாகர் (22) ஆகியோருடன் சென்று கிரேன் மூலம் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கிரேன் நுனியில் நரசிம்மன் அமர்ந்திருந்தார். சண்முகம் கிரேனை இயக்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் அங்குள்ள கம்பி மீது மோதியது. இதில் கிரேன் நுனியில் அமர்ந்திருந்த நரசிம்மனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி மணலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story