வீட்டில் பிணமாக கிடந்த தொழிலாளி


வீட்டில் பிணமாக கிடந்த தொழிலாளி
x

மாஞ்சோலையில் வீட்டில் தொழிலாளி பிணமாக கிடந்தார்.

திருநெல்வேலி

அம்பை:

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் துரைராஜ் (வயது 53) என்பவர் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வந்தார். குடும்பத்தினர் யாரும் இல்லாமல் தனியாக வசித்த இவர் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மனநிலை சரியில்லாமல் சுற்றித்திரிந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் கல்லிடைக்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அங்கு வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த துரைராஜ் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story