வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த தொழிலாளி


வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த தொழிலாளி
x

வீட்டில் தொழிலாளி அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை பழையபேட்டை கண்டியபேரி பகுதியைச் சேர்ந்த ஊர்காவலன் என்ற அந்தோணிமுத்து மகன் சொர்ணம் (வயது 52), தொழிலாளி. இவரது முதல் மனைவி இறந்துவிட்டதால், 2-வதாக குளோரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உமேஷ், அஜய் ஆகிய மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குளோரி தென்கலத்தில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு சென்றுவிட்டாா். இதனால் சொர்ணம் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். இந்த நிலையில், சொர்ணம் வீடு பூட்டப்பட்ட நிலையில் அங்கிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம்பக்கத்தினர் பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது சொர்ணம் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து, அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சொர்ணம் எப்படி? இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story