சுங்குவார்சத்திரம் அருகே தொழிற்சாலையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


சுங்குவார்சத்திரம் அருகே தொழிற்சாலையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

சுங்குவார்சத்திரம் அருகே தொழிற்சாலையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம்

மனஉளைச்சல்

வேலூர் மாவட்டம் செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன். இவரது மகன் ஏமன்குமார் (வயது 21). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள கனரக வாகனம் தயாரிக்கும் தொழிச்சாலையில் வேலை செய்து வந்தார். ஏமன்குமார் வேலைசெய்யும் இடத்தில் யாரிடமும் சரியாக பேசாமல் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவுபணிக்கு ஏமன்குமார் ெசன்றார். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் ஏமன்குமார் தொழிற்சாலையில் குழாயில் தூக்குப்போட்டு உயிருக்கு போராடினார்.

தற்கொலை

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் ஏமன்குமாரை மீட்டு தொழிற்சாலையில் இருந்த ஆம்புலன்சு மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏமன்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீசார் ஏமன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story