நின்ற பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலி


நின்ற பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலி
x

நாங்குநேரியில் நான்கு வழிச்சாலையில் நின்ற பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரியில் நான்கு வழிச்சாலையில் நின்ற பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

கூலி தொழிலாளி

தூத்துக்குடி அருகே உள்ள மீனாட்சிபட்டியை சேர்ந்தவர்கள் ஆறுமுகம் (வயது 28), ராமகிருஷ்ணன் (31). இவர்கள் இருவரும் கூலி தொழிலாளிகள்.

இவர்கள் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் நாங்குநேரியில் கோர்ட்டு முன்பு உள்ள நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ராமகிருஷ்ணன் ஓட்டினார்.

பரிதாப சாவு

அப்போது அவர்களுக்கு முன்னால் சென்ற தனியார் பஸ் அங்குள்ள நிறுத்தத்தில் நின்றது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள், பஸ் மீது மோதியது. இதில் ஆறுமுகம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராமகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்த ராமகிருஷ்ணனை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆறுமுகம் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story