பெண்களை ஆபாச வீடியோ எடுத்து ரசித்த தொழிலாளி


பெண்களை ஆபாச வீடியோ எடுத்து ரசித்த தொழிலாளி
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெண்களை ஆபாச வீடியோ எடுத்து ரசித்த தொழிலாளி

கோயம்புத்தூர்

கோவை

மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து ரசித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மளிகை கடை

கோவை பாப்பநாயக்கன் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் ஒரு மளிகைக்கடை உள்ளது. இந்த மளிகைக்கடைக்கு தினமும் ஆசாமி ஒருவர் வந்துள்ளார். அவர் கடைக்கு வந்ததும் பொருட்களை சொல்லி விட்டு, செல்போனில் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் அந்த ஆசாமி மீது கடையில் இருக்கும் மளிகைக்கடைக்காரரின் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தினமும் அந்த ஆசாமியின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்தார். அப்போது, அந்த ஆசாமி மளிகை கடையில் பொருட்கள் வாங்குவதற்காக காத்திருந்த பெண்களை செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்ததை கண்டுபிடித்தார். இதையடுத்து அவர் இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்தார்.

ஆபாச வீடியோ

இந்தநிலையில் அந்த ஆசாமி நேற்று முன்தினம் வழக்கம்போல் பெண்கள் கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டு இருக்கும்போது மளிகை கடைக்கு வந்தார். அப்போது மளிகைக்கடைக்காரரும், அவரது மனைவியும் அந்த ஆசாமி கண்காணித்தனர். அப்போதும் அந்த ஆசாமி செல்போனில் பேசுவதுபோன்று அங்கு வந்த பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்ததாக தெரிகிறது.

உடனே இதுகுறித்து அவர் தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். உடனே மளிகைக்கடைக்காரர் அங்கு வந்து அக்கம்,பக்கத்தினர் உதவியுடன் அந்த ஆசாமியை மடக்கிப்பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தார்.

விசாரணையில் அவர் பாப்பநாயக்கன்பானையம் பழையூரை சேர்ந்த மோட்டார் ரீவைண்டிங் வேலை செய்யும் தொழிலாளியான தியாகராஜன் (வயது 46) என்பது தெரிய வந்தது. மேலும் இவர் தினசரி தனது வீட்டில் நடைபயிற்சி செல்வதாக கூறி விட்டு வெளியே வந்து, மளிகை கடைக்கு சென்று செல்போன் பேசுவது போல நடித்து கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதனை தனிமையில் ரசித்து வந்ததும் தெரிய வந்தது.

தொழிலாளி கைது

இதையடுத்து தியாகராஜனிடம் இருந்து செல்போனை போலீசாா் கைப்பற்றினர். அதில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதி வேற்றம் செய்துள்ளாரா என்பதை கண்டு பிடிப்பதற்காக செல்போனை போலீசார் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

இதற்கிடையே போலீசார் அவரை கைதுசெய்தனர். மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பெண்களை தொழிலாளி ஆபாச வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story