பேச மறுத்த கள்ளக்காதலியை கழுத்தை அறுத்துக் கொன்ற தொழிலாளி
பேச மறுத்ததால் வீடு புகுந்து கள்ளக்காதலியை கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு தப்பிய தொழிலாளியை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
தாயில்பட்டி,
பேச மறுத்ததால் வீடு புகுந்து கள்ளக்காதலியை கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு தப்பிய தொழிலாளியை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கழுத்தை அறுத்துக்கொலை
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள ஊத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 45). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேசுவரி (40). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
நேற்று காலை வீட்டில் ராஜேசுவரி தனியாக இருந்தார். திடீரென கழுத்து அறுபட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ஏழாயிரம் பண்ணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். ராஜேசுவரியின் உடலை பரிசோதனைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தனியாக இருந்தார்
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ராஜேசுவரி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவருக்கும், சாத்தூர் அருகே உள்ள சங்கரநத்தம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளியான பரமசிவம் (42) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதனால் மனைவியை முத்துப்பாண்டி கண்டித்தார். பின்னர் ராஜேசுவரி கணவரை விட்டு பிாிந்து வாழ்ந்து வந்தார். பின்னர் சமரசம் ஏற்பட்டு இருவரும் சேர்ந்தனர். அதன்பின்பு, கள்ளக்காதலனான பரமசிவத்துடன் அவர் பேசுவதை நிறுத்தி கொண்டதாக தெரியவருகிறது.
இந்தநிலையில் நேற்று ராஜேசுவரி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த பரமசிவம் அங்கு வந்து அவரிடம் பேச முயற்சித்தார். ஆனால் அவர் பேசவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், ராஜேசுவரியை தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், துணை சூப்பிரண்டு வினோஜி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். இந்த கொலை குறித்து ஏழாயிரம் பண்ைண போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமசிவத்தை தேடி வருகின்றனர்.
பேச மறுத்ததால் கள்ளக்காதலியை வீடு புகுந்து கழுத்தை அறுத்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.