லாரி மோதி படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
லாரி மோதி படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புதுக்கோட்டை
அன்னவாசல் அருகே உள்ள காலாடிப்பட்டி சத்திரத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 60), கூலி தொழிலாளி. இவர் காலாடிப்பட்டி அருகே நடந்து சென்றபோது அவ்வழியாக சென்ற டிப்பர் லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜாவை அருகே இருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜா நேற்று பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மண்ணவேளாம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் (26) மீது அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story