காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு யானை


காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு யானை
x
தினத்தந்தி 27 July 2023 1:30 AM IST (Updated: 27 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

பர்லியாரில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

நீலகிரி

குன்னூர்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை பர்லியார், கே.என்.ஆர்.நகர், மரப்பாலம் போன்ற பகுதிகளில் நடவு செய்யப்பட்டு உள்ள பலா மரங்களில் தற்போது சீசன் காரணமாக பழங்கள் காய்த்து தொங்குகின்றன. இந்த பழங்களை ருசிக்க சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் மேற்கண்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு உள்ளன.

இந்த யானைகள் தண்ணீர், உணவு தேடி குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை, மலை ரெயில் பாதையை அவ்வப்போது கடந்து சென்று வருகின்றன. காட்டு யானைகள் சாலையில் நடமாடும் போது, வாகனங்களை இருபுறமும் நிறுத்தி யானைகள் கடந்து செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு யானைக்கு இடது பின்னங்காலில் காயம் ஏற்பட்டு உள்ளது. அந்த யானை உணவு தேட முடியாமல் பிளாஸ்டிக் கழிவுகளை தின்று வருவதாக தெரிகிறது. இதையடுத்து காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக குன்னூர் வனச்சரகர் ரவீந்தரநாத் தலைமையில் வனத்துறையினர், மருத்துவ குழுவினருடன் பர்லியார் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.


Next Story