சேவல் வடிவில் விளைச்சலான சவ்சவ்


சேவல் வடிவில் விளைச்சலான சவ்சவ்
x
தினத்தந்தி 3 Feb 2023 7:00 PM GMT (Updated: 2023-02-04T00:31:03+05:30)

சிறுமலையில் சேவல் வடிவில் சவ்சவ் விளைச்சலானது.

திண்டுக்கல்


சிறுமலை அருகே பள்ளக்காடு என்ற இடத்தில் தனுஷ்கோடி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு சவ்சவ், அவரை, பீன்ஸ், வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை அவர் சாகுபடி செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவருடைய தோட்டத்தில் விளைச்சலான சவ்சவ் காய்களில் ஒன்று மட்டும் வழக்கத்தைவிட வித்தியாசமாக இருந்தது. இதையடுத்து அந்த காயை மட்டும் தனுஷ்கோடி பறித்து தனியாக வைத்து பார்த்த போது அது சேவல் வடிவில் இருப்பதை பார்த்து ஆச்சர்யமடைந்தார். இதற்கிடையே சேவல் வடிவில் சவ்சவ் இருப்பது குறித்த தகவல் அக்கம் பக்கத்தில் வேகமாக பரவியது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் வந்து சேவல் வடிவில் உள்ள சவ்சவ் காயை வியப்புடன் பார்த்து சென்றனர். இதேபோல் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இதே பகுதியில் இதய வடிவிலான பலாப்பழம் விளைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story