கண்மாயில் மூழ்கி இளம்பெண் சாவு
கண்மாயில் மூழ்கி இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள எலிங்கநாயக்கம்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 43). இவரது மனைவி கவிதா (29). கடந்த 7 ஆண்டுகளாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த கவிதா அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று அவர் அருகில் உள்ள கண்மாய்க்கு சென்று துணி துவைத்து வருவதாக கூறி சென்றார். வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் ராஜா தனது உறவினர்களுடன் கண்மாய்க்கு சென்று தேடியபோது கண்மாயில் கவிதா நீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுபற்றி ராஜா கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story