இளம்பெண் மாயம்


இளம்பெண் மாயம்
x

இளம்பெண் மாயமானார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள பருக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 28). விவசாயி. இவரது மனைவி எழிலரசி(21). இவர் சம்பவத்தன்று அருகில் உள்ள சுத்தமல்லிகடைவீதிக்கு சென்று வருவதாககூறி சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் அவர் இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான எழிலரசியை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story