காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பாளையங்கோட்டையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாளையங்கோட்டையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூக்கில் தொங்கினார்
பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே உள்ள செந்தில் நகரை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 27). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஷாலினி (25). இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
நேற்று முன்தினம் மாயாண்டி வேலைக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. குழந்தை அழுது கொண்டிருந்தது.
இதைக்கண்ட மாயாண்டி வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது, ஷாலினி கயிற்றால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியது தெரியவந்தது. இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
பாளையங்கோட்டை போலீசாரும் அங்கு வந்து ஷாலினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காதல் திருமணம்
ஷாலினி சொந்த ஊர் கன்னியாகுமரி. அங்குள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் மாயாண்டி படித்தபோது, அவருக்கும், அருகில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்த ஷாலினிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி 2017-ம் ஆண்டு 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு பாளையங்கோட்டையில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஷாலினி திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணம் முடிந்து 6 ஆண்டுகளே ஆவதால், ஷாலினி தற்கொலைக்கான காரணம் குறித்து நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தி வருகிறார்.