காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 1 Jun 2023 12:39 AM IST (Updated: 1 Jun 2023 3:45 PM IST)
t-max-icont-min-icon

களக்காடு அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதல் திருமணம்

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா, கண்ணனூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் என்பவருடைய மகள் ரித்திகா (வயது 23). இவரும், நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பொத்தைசுத்தி, இந்திரா காலனியை சேர்ந்த அஜித்குமார் என்பவரும் காதலித்து வந்தனர்.

இவர்களது காதலுக்கு ரித்திகா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி ரித்திகாவும், அஜித்குமாரும் கடந்த 30.4.2021 அன்று திருமணம் செய்து கொண்டனர். இதனால் ரித்திகாவின் பெற்றோர்கள் ரித்திகாவுடன் பேசாமல் இருந்து வந்தனர்.

தற்கொலை

இந்நிலையில் சமாதானம் அடைந்த ரித்திகாவின் தாயார் தமிழரசி, கடந்த 2 மாதமாக ரித்திகாவுடன் பேசி வந்துள்ளார். கடந்த 29-ந் தேதி இரவில் 11.30 மணிக்கு ரித்திகா தனது தாயார் தமிழரசிக்கு போனில் தொடர்பு கொண்டு தனக்கும், தனது கணவர் அஜித்குமாருக்கும் தகராறு என்றும், காலையில் ஊருக்கு புறப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே நேற்று முன்தினம் அதிகாலையில் ரித்திகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தமிழரசி களக்காடு போலீசில் புகார் செய்தார். நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story