வடமதுரை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது


வடமதுரை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
x

வடமதுரை அருகே கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள உடையாம்பட்டியை சேர்ந்தவர் விவேக் (வயது 29). கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர், ஏ.வி.பட்டி சாலையில் உள்ள மந்தைகுளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வடமதுரை தெற்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணபாண்டி (30) என்பவர், விவேக்கின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் சட்டைப்பையில் இருந்த ரூ.900-த்தை பறித்தார்.

அதன்பிறகு சரவணபாண்டி, தனது மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றார். அவரை விவேக் பிடிக்க முயன்றபோது, மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு அவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் விவேக் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து, சரவணபாண்டியை கைது செய்தார். மேலும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.Next Story