பூந்தமல்லி அருகே தலை, கைகளை துண்டித்து வாலிபர் கொடூர கொலை


பூந்தமல்லி அருகே தலை, கைகளை துண்டித்து வாலிபர் கொடூர கொலை
x

பூந்தமல்லி அருகே தலை, கைகளை துண்டித்து வாலிபரை கொடூரமாக கொலை செய்துவிட்டு, உடலை தீ வைத்து எரித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கத்தில் இருந்து கன்னபாளையம் செல்லும் சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு எரித்து வருவது வழக்கம். நேற்று அந்த குப்பைகளுக்கு அருகில் சாலையை ஒட்டிய பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலை, 2 கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

உடனடியாக ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி ஆகிய 3 போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். எல்ைல பிரச்சினையால் வாலிபர் உடலை மீட்டு விசாரிப்பதில் 3 போலீசாரிடையே குழப்பம் ஏற்பட்டது.

கொடூர கொலை

பின்னர் சம்பவம் நடந்த இடம் திருவேற்காடு போலீஸ் நிலைய எல்லைக்குள் வருவதால் மற்ற 2 போலீசாரும் சென்று விட்டனர். திருவேற்காடு போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து, வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாலிபரின் தலை மற்றும் 2 கைகளை துண்டித்து கொடூரமாக கொலை செய்து உள்ளனர். பின்னர் உடலை மட்டும் இங்கு கொண்டு வந்து தீ வைத்து எரித்து உள்ளனர். கொலையான வாலிபர் யார்?,. எந்த பகுதியை சேர்ந்தவர்?, கொலையாளிகள் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து திருவேற்காடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தலை, கைகள் எங்ே்க?

வாலிபரின் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் கைகள் எங்கு வீசப்பட்டு உள்ளது? என அந்த உடல் பாகங்களையும் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாயமானவர்கள், சமீபத்தில் நடந்த குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பற்றிய புகார்கள் குறித்த தகவல்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

நண்பர்களுக்கு இடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு எங்காவது அந்த வாலிபரை கொலை செய்து விட்டு அடையாளம் தெரியாமல் இருக்க தலை, கைகளை துண்டித்து வேறு எங்கோ வீசிவிட்டு, உடலை இங்கு கொண்டு வந்து தீ வைத்து எரித்தனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

1 More update

Next Story