கிணற்றில் குளிக்கச்சென்ற வாலிபர் பலி


கிணற்றில் குளிக்கச்சென்ற வாலிபர் பலி
x

கிணற்றில் குளிக்கச்சென்ற வாலிபர் உயிரிழந்தார்.

பெரம்பலூர்

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கிராமத்தில் வசித்து வருபவர் ராம்குமார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் அதே பகுதியை சேர்ந்த ஜவகர்(வயது 34) குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், கிணறு உள்ள பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது கிணற்றில் ஜவகர் பிணமாக மிதந்தார். இதுபற்றி அவர்கள் பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து பார்வையிட்டனர்.

மேலும் இது பற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் கிணற்றில் இறங்கி ஜவகரின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story