குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை


குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் விஷம் குடித்து  தற்கொலை
x

கும்மிடிப்பூண்டி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் அருகே உள்ளது வெட்டுக்காடு கிராமம். இந்த கிராமத்தை சேர்த்த ஏழுமலை என்பவரின் மகள் சவுந்தர்யா (வயது 22). இவருக்கும் மங்காவரம் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி கணேஷ் (25) என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டரை வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் ஏதும் இல்லை.

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்து வந்த சவுந்தர்யா அதனை உறவினர்களிடம் தெரிவித்து மனசங்கடப்பட்டார். மேலும் குழந்தை இல்லாத ஏக்கத்தால் கடுமையான மன உளைச்சலில் இளம்பெண் சவுந்தர்யா இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 14-ந்தேதி வீட்டில் தனியே இருக்கும்போது எறும்பு மருந்தை (விஷம்) எடுத்து சவுந்தர்யா சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளம்பெண் சவுந்தர்யா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம் பெண் சவுந்தர்யா எறும்பு மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story