சின்னசேலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை


சின்னசேலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 7:03 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் அடுத்த பெரிய சிறுவத்தூர் கிராம காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மனைவி மகாலட்சுமி(வயது 20). இவர்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. முனுஸ்னி என்ற 9 மாத பெண் குழந்தை உள்ளது. திருநாவுக்கரசு சென்னையில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். கணவரின் வீட்டில் இருந்த மகாலட்சுமி நேற்று திடீரென மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த சின்ன சேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மகாலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து விருத்தாசலம் அருகே உள்ள கோணாங்குப்பத்தை சேர்ந்த மகலாட்சுமியின் தந்தை ராஜேந்திரன் அளித்த புகாரின் போில், சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கைக்குழந்தையுடன் இருந்த பெண், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story