மயங்கி விழுந்த இளம்பெண் திடீர் சாவு
மயங்கி விழுந்த இளம்பெண் திடீரென இறந்தார்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள அரசகுடும்பன்பட்டியை சேர்ந்தவர் அசோகன். இவருடைய மகள் பிருந்தா (வயது 18). பட்டாசு ஆலையில் பணியாற்றி வந்த பிருந்தாவுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து திடீரென மயங்கி விழுந்த பிருந்தாவை உடனடியாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் பிருந்தாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி பிருந்தாவின் தாயார் முருகேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story