2-வது கணவருடன் மார்க்கெட்டுக்கு சென்ற இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்


2-வது கணவருடன் மார்க்கெட்டுக்கு சென்ற இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 21 March 2023 12:15 AM IST (Updated: 21 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டை அருகே 2-வது கணவருடன் மார்க்கெட்டுக்கு சென்ற இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த முதல் கணவர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே 2-வது கணவருடன் மார்க்கெட்டுக்கு சென்ற இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த முதல் கணவர் கைது செய்யப்பட்டார்.

இளம்பெண்

சுல்தான்பேட்டையை அடுத்த கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 32). கூலித்தொழிலாளி. இவருக்கும், கரடிவாவியை சேர்ந்த கணேஷ்வரி(25) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கோபித்துக்கொண்ட கணேஷ்வரி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். எனினும் மாரிமுத்து தொடர்ந்து தன்னுடன் சேர்ந்து வாழ வற்புறுத்தியதால், பல்லடம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். உடனே போலீசார், அவரை அழைத்து எச்சரித்து அனுப்பினர்.

கொலை மிரட்டல்

இதற்கிடையில் தமிழரசன்(26) என்பவரை கணேஷ்வரி 2-வதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர்கள் 2 பேரும், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க காமநாயக்கன்பாளையம் மார்க்கெட்டுக்கு சென்றனர்.

அப்போது அங்கு வந்த மாரிமுத்து தகாத வார்த்தைகளால் திட்டி அவர்கள் 2 பேரையும் தாக்கியதாக தெரிகிறது. மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரிமுத்துவை கைது செய்தனர்.

1 More update

Next Story