குழந்தையுடன் இளம்பெண் மாயம்


குழந்தையுடன் இளம்பெண் மாயம்
x
தினத்தந்தி 27 Aug 2023 12:15 AM IST (Updated: 27 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயமானார்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் திருமலை(வயது 29). இவரது மனைவி தனம்(20). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு வயதில் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று தனம் அவரது குழந்தையுடன் அதே பகுதியில் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற வேலைக்கு சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த திருமலை மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும், மனைவி, குழந்தை இருவரையும் காணவில்லை. பின்னர் இது குறித்து அவர் கொடுத்த புகாாின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story