மோட்டார்சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி வாலிபர் சாவு


மோட்டார்சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி வாலிபர் சாவு
x

மோட்டார்சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி வாலிபர் சாவு

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள மனோரா சுற்றுலா தலத்திற்கு பட்டுக்கோட்டை பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரும், பாப்பாநாடு ஆம்லாபட்டு பகுதியை சேர்ந்த அவரது நண்பரும் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் மல்லிப்பட்டினம் அருகே சென்றுகொண்டிருந்த போது, எதிரே வந்த மீன் சரக்கு வேன் நிலைதடுமாறி எதிர்பாராவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது நண்பர் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story