திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த வாலிபர் கைது


திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Jun 2023 3:14 PM IST (Updated: 19 Jun 2023 3:16 PM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம்

திருவாலங்காடு ஒன்றியம் ஆற்காடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணுக்கும், வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் (30) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் வினோத்குமார் நாம் திருமணம் செய்து போகிறவர்கள் தானே என்று ஆசை வார்த்தைகளை கூறி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் அப்பெண்ணை அழைத்துச் சென்று காஞ்சீபுரத்தில் தனியறையில் வினோத்குமார் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பெங்களூரு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் வினோத் குமாருக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தன்னுடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றிய வினோத் குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் கார்த்திகா வினோத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.


Next Story