தூத்துக்குடி அருகேதொழிலாளியிடம் செல்போன் பறிக்க முயன்ற வாலிபர் சிக்கினர்
தூத்துக்குடி அருகேதொழிலாளியிடம் செல்போன் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
தூத்துக்குடி அருகே தொழிலாளியை தாக்கி செல்போன் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரது மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போனை பறிக்க முயற்சி
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை மறவன்மடத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகன் பேச்சிப்பழம் (வயது 47). தொழிலாளி. இவர் கடந்த 3-ந் தேதி கீழகூட்டுடன்காடு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே வந்து கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் பேச்சிப்பழத்திடம் இருந்து செல்போனை பறிக்க முயன்றுள்ளார். ஆனால் பேச்சிப்பழம் செல்போனை தரமறுத்து உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மர்மநபர் அடித்து உதைத்து, பறிக்கமுயன்றும் பேச்சிப்பழம் செல்போனை தரமறுத்து அவருடன் போராடியுள்ளார். மேலும் அவர் போட்ட சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதை பார்த்த மர்மநபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார்.
வாலிபர் கைது
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கீழகூட்டுடன்காடு ராஜீவ்நகரை சேர்ந்த சரவணன் மகன் பாலா என்ற பாலமுருகன் (23) என்பவர் பேச்சிப்பழத்திடம் செல்போனை பறிக்க முயன்றது தெரியவந்தது. உடனடியாக போலீசார் பாலமுருகனை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.