செஞ்சி அருகே பஸ் மோதி வாலிபர் பலி


செஞ்சி அருகே பஸ் மோதி வாலிபர் பலி
x

செஞ்சி அருகே பஸ் மோதி வாலிபர் உயிரிழந்தார்.

விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சி அருகே உள்ள மட்டப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் துரைக்கண்ணு மகன் வேணுகோபால்(வயது 35). இவர் மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் சென்று விட்டு மட்டப்பாறை கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார். மட்டப்பாறை கூட்டு ரோடு அருகே வந்தபோது பின்னால் விழுப்புரத்தில் இருந்து செஞ்சி நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று வேணுகோபால் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாாின்பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story