கிராவல் மண் அள்ளிய போது தப்பியோடிய வாலிபர் கைது


கிராவல் மண் அள்ளிய போது தப்பியோடிய வாலிபர் கைது
x

கிராவல் மண் அள்ளிய போது தப்பியோடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

ஆவூர்:

விராலிமலை தாலுகா, ஆலங்குடி ஊராட்சிக்குட்பட்ட கைகுடிப்பட்டியில் கடந்த 18-ந் தேதி அனுமதியின்றி கிராவல் மண் அள்ளியபோது மண்டையூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்து பொக்லைன் எந்திர டிரைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் (வயது 21) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் தப்பியோடிய டிராக்டர் டிரைவர் சித்தாம்பூர் முருகேசன் மகன் ராமையா (27) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ராமையா சித்தாம்பூர் பகுதியில் பதுங்கி இருந்தபோது மண்டையூர் போலீசார் அவரை கைது செய்து கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.


Next Story