மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்த வாலிபர் கைது
பெங்களூருவில் இருந்து மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயம் ஒழிப்பதற்கும், போலி மதுபாட்டில்கள் விற்பனையை ஒழிக்கவேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் வாணியம்பாடி- நாட்டறம்பள்ளி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூருவில் இருந்து வேகமாக வந்த மினிவேனை டோல்கேட் பகுதியில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1,440 மது பாக்கெட் அடங்கிய அட்டை பெட்டிகள் இருந்தது. இதையடுத்து வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பெங்களூருவில் இருந்து மது பாக்கெட்டுகளை கடத்தி வந்த புத்தாகரம் அருகே முத்தா கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 25) என்பவரை கைது செய்தனர்.
மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.