மது விற்ற வாலிபர் கைது


மது விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஆறுமுகநேரி ெரயில்வே கேட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள செல்வராஜபுரம் பெட்டிக்கடை ஒன்றில் சட்ட விரோதமாக மது விற்பனை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பெட்டிக்கடைக்காரர் ஆறுமுகநேரி கீழச்சண்முகபுரம் கமலா நேரு காலனி பகுதியைச் சேர்ந்த அழகேசன் மகன் ரமேஷ் பாண்டியன் (வயது 29) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்களையும், மது விற்ற பணம் 7,250 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் காயல்பட்டினம் பூந்தோட்டம் பகுதியில் ஜெயராமன் என்பவரது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரது கடையில் இருந்து புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.


Related Tags :
Next Story