சாராயம் விற்ற வாலிபர் கைது


சாராயம் விற்ற வாலிபர் கைது
x

சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது வேப்பந்தட்டை தாலுகா, காரியானூர் ஆற்றுப்பாலம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட சாராயத்தை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து கொண்டிருந்த கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா, கொரக்கவாடி அம்மா குளத்தை சேர்ந்த மருதமுத்து மகன் வெங்கடேசனை (வயது 27) கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரிடம் இருந்த தலா 100 மில்லி அளவுடைய 17 பாக்கெட்டுகளில் இருந்து சாராயத்தை போலீசார் கைப்பற்றி அழித்தனர். இது போன்று தங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடை செய்யப்பட்ட சாராயத்தை தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ மாவட்ட போலீஸ் அலுவலகத்தை 9498100690 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story