சாராயம் விற்ற வாலிபர் கைது


சாராயம் விற்ற வாலிபர் கைது
x

ஆம்பூர் அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தேவலாபுரம் பகுதியில் உமராபாத் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆம்பூர் புதுமனை பகுதியை சேர்ந்த அணில்குமார் (வயது 22) என்பவர் சாராயம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அணில்குமாரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story