மது விற்ற வாலிபர் கைது


மது விற்ற வாலிபர் கைது
x

மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

லாலாபேட்டை அருகே பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் மகாவீரர் ஜெயந்தி தினமான கடந்த 4-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் (வயது 34) சட்ட விரோதமாக மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை லாலாபேட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து மொத்தம் 381 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து நேற்று லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில், பறிமுதல் செய்யப்பட்ட 381 மதுபாட்டில்களும் கழிவுநீர் செல்லும் கால்வாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.


Next Story