ஆதார் அட்டை திருத்த முகாம்
ஆதார் அட்டை திருத்த முகாம் நடந்தத.
கரூர்
அரவக்குறிச்சி அடுத்த பள்ளப்பட்டியில் புதிய ஆதார் அட்டை எடுத்தம் மற்றும் ஆதார் அட்டை திருத்த செய்யும் முகாம் நடைபெற்றது. முகாமை பள்ளப்பட்டி நகர ஐக்கிய ஜமாத் தலைவரும், பள்ளப்பட்டி நகராட்சி துணை தலைவருமான தோட்டம் பஷீர் அகமது தொடங்கி வைத்தார். முகாமில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் புதியதாக ஆதார் அட்டை எடுப்பதற்கு அவர்களின் கண் விழியும், கைரேகையும் பயோமெட்ரிக் முறையில் உள்ளீடு செய்யப்பட்டது. இதில், மாவட்ட மருந்து வணிகர் சங்க முன்னாள் தலைவர் பாப்புலர் அபு, மஞ்சுவள்ளி யூனுஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story