ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்கி பயன்பெறலாம்


ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்கி பயன்பெறலாம்
x

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கணக்கு தொடங்கி பயன்பெறலாம் என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கணக்கு தொடங்கி பயன்பெறலாம் என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வங்கிக்கணக்கு

கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு அவசியம்.

எனவே தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் பயனாளிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி ஒரு சில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க முடியும்.

உதவித்தொகை

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகள் மட்டுமில்லாமல் 100 நாள் வேலை திட்ட பயனாளிகள், பி.எம். கிசான் திட்ட பயனாளிகள், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, தொழிலாளர் நல வாரிய உதவித் தொகை பெறும் பயனாளிகளும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

எனவே திருவண்ணாமலை மாவட்டத்தின் பயனாளிகள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையில் வங்கிக்கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story