11 தொகுதிகளில் 1,216 மையங்களில் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம்

11 தொகுதிகளில் 1,216 மையங்களில் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம்
x

சேலம் மாவட்டத்தில் நேற்று வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் 11 தொகுதிகளில் 1,216 இடங்களில் நடந்தது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் நேற்று வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் 11 தொகுதிகளில் 1,216 இடங்களில் நடந்தது.

ஆதார் எண் இணைப்பு முகாம்

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. அதற்கான பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டத்தில் சேலம், ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு, மேட்டூர் உள்பட 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த நிலையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

1,216 இடங்கள்

அந்தவகையில் நேற்று நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,216 இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வாக்காளர்கள் ஆதார் எண்ணை இணைப்பதற்கான 6பி படிவத்தை வழங்கினர்.

அதன்படி சேலம் குளூனி பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த மையத்தில் ஏராளமானவர்கள் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்தனர்.

Next Story