ஆதார் சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமை சுழற்சி முறையில் செயல்படும்
ஆதார் சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமை சுழற்சி முறையில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
ஆதார் சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமை சுழற்சி முறையில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் அனைத்து தாலுகா அலுவலகங்களில் செயல்பட்டு வரும் அனைத்து நிரந்தர ஆதார் சேவை மையங்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் சுழற்நசி முறையில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆம்பூர் தாலுகா அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் மற்றும் 30-ந் தேதி, நவம்பர் 6 மற்றும் டிசம்பர் 4-ந் தேதியும், நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் வருகிற 16-ந் தேதியும் நவம்பர் 13, 27 மற்றும் டிசம்பர் 11-ந் தேதியும் செயல்படும். அதேபோல் வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் வருகிற 23-ந் தேதி, நவம்பர் 20 மற்றும் டிசம்பர் 18, 25 ஆகிய தேதிகளில் செயல்படும்.
மேற்படி சிறப்பு ஆதார் முகாமினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி ஆதார் புதிய பதிவு, 5 வயது மற்றும் 15 வயது முடிந்தவர்களுக்கான கட்டாய கைவிரல் ரேகை பதிவு, பெயர் முகவரி, பிறந்த தேதி மாற்றம் செய்தல், புகைப்படம், கைவிரல், கருவிழி மாற்றம் செய்தல், ஆவணங்கள் புதுப்பித்தல் போன்ற சேவைகளை பெறலாம்.
அரசின் சலுகைகளை பெற ஆதார் அட்டை கட்டாயம் என்பதை கருத்தில் கொண்டு, அனைவரும் ஆதார் தகவல்களை புதுப்பித்து வைத்து கொள்ளவும், நீண்ட காலமாக புதுப்பிக்காதவர்கள் சரியான ஆவணங்களை தற்போது சமர்ப்பித்து பதிவு செய்து புதுப்பித்துக்கொள்ளவும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.