ஆதார் சிறப்பு முகாம்


ஆதார் சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 7 Oct 2023 12:15 AM IST (Updated: 7 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழக்கரையில் ஆதார் சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது.

ராமநாதபுரம்

கீழக்கரை,

ஆதார் அட்டை 10 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிப்பது அவசியம் என மத்திய அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து ஆதார் அட்டையை புதுப்பிக்கும் பணியில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது ஆங்காங்கே ஆதார் முகாமில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை இருந்து வருகிறது. இதனால் அரசு சார்பில் கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் தலைமையில் ஆதார் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கீழக்கரை தாலுகா நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 2 நாட்கள் பழைய குத்பா பள்ளி மக்தூமியா மேல்நிலைப் பள்ளி மற்றும் மேலத்தெரு ஹமீதியா மெட்ரிக் பள்ளி ஆகிய 2 பள்ளிகளிலும் நடைபெறும். ஆதார் புதுப்பித்தல், புகைப்படம் எடுத்தல், பெயர், முகவரி திருத்தம், தொலைபேசி எண் சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது.


Related Tags :
Next Story